Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கொசு விரட்டிகள் பயன்பாடு குறித்த கள ஆராய்ச்சித் திட்டம்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

கொசு விரட்டிகள் பயன்பாடு குறித்த கள ஆராய்ச்சித் திட்டம்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளிடம் இந்த ஆராய்ச்சிக்கான முன் ஒப்புதல் கடிதத்தை அமைச்சர் முறைப்படி வழங்கினார்.

பகிரவும் WhatsApp Facebook

டெங்கு தடுப்பூசி மற்றும் பல்வேறு வகையான கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கள ஆராய்ச்சித் திட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அறிவித்துள்ளார்.


தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், நாட்டிலேயே முன்னோடி முயற்சியாக டெங்கு தடுப்பூசி மற்றும் கொசு விரட்டிகள் பயன்பாடு குறித்த கள ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளிடம் இந்த ஆராய்ச்சிக்கான முன் ஒப்புதல் கடிதத்தை அமைச்சர் முறைப்படி வழங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி. கே. ராஜீவ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனித்துவமான மாற்று மருந்துகள் இல்லை. எனவே, முறையான தடுப்பு நடவடிக்கைகளே நமது முதன்மையான மற்றும் இறுதியான ஆயுதமாக விளங்கி வருகிறது. பொது சுகாதாரத் துறையில் எப்போதும் புதுமைகளைப் புகுத்தி வழிகாட்டி வரும் தமிழக அரசு, தற்போது ஜப்பான் நாட்டின் 'தேகேடா' நிறுவனம் தயாரித்துள்ள 'கியூடெங்கா' தடுப்பூசி பயன்பாட்டை முன்னோடி ஆய்வாக முன்னெடுத்துள்ளது. 

இந்தத் தடுப்பூசி, தீவிர பாதிப்பிலிருந்து 80 முதல் 90 சதவீதம் வரை பாதுகாப்பளிக்கக்கூடியது. 3 மாத இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்தப்படும் இதை இந்தியச் சூழலில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மக்களுக்கு எவ்விதம் செம்மையாகக் கொண்டு சேர்ப்பது என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். மேலும், இந்த ஆய்வு முற்றிலும் பொதுமக்களின் தன்னார்வ சம்மதத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். யாரையும் கட்டாயப்படுத்தித் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது. இத்திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படும் முடிவுகள் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் அறிவியல் பூர்வ பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
பொதுத்துறை வங்கிகளின் லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்வு
அடுத்த செய்தி
கோவாவில் டிச.16 ஐபிஎல் ஏலம்

தொடர்புடைய செய்திகள்